கரியகாளியம்மன் கோவில் திருத்தேர் பெருவிழா
ADDED :2795 days ago
எலச்சிபாளையம்: பெரியமணலியில் உள்ள கரியகாளியம்மன், பெரியமாரியம்மன், நாகேசுவர சுவாமி, வேணுகோபால சுவாமி கோவிலில், ஏப்., 4 அன்று திருத்தேர் பெருவிழா நடப்பதை முன்னிட்டு, கடந்த, 20ல், மாரியம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. 27 அன்று கரியகாளியம்மனுக்கு பூச்சாட்டப்படுகிறது. 30ல், கிராமசாந்தி, 31ல், கொடியேற்றம், ஏப்.,3ல், சக்தி அழைத்தல், 4 அன்று கரியகாளியம்மன் திருத்தேர் வடம்பிடித்தல், 5ல், மாரியம்மன் திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. ஏப்., 6ல், சிவன், பெருமாள் திருத்தேர் வடம்பிடித்தல், இரவு 10:00 மணிக்கு புஷ்ப ரதம், 7 இரவு சத்தாபரணம், அம்மன்திருவீதி உலா, 8ல், மஞ்சள் நீராட்டுடன் விழா முடிகிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சிவகாமி செய்து வருகிறார்.