பூதபுரீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழா
ADDED :2795 days ago
ஸ்ரீபெரும்புதுார்: பூதபுரீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, ரிஷப வாகனம் ஊர்வலம், நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமை வாய்ந்த சவுந்தரவள்ளி அம்பாள் சமேத பூதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திர பெருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை கேடயம், மாலை ரிஷப வாகனத்தில், சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் பங்கேற்று, வழிபட்டனர்.