பங்குனி திருவிழாவிற்கு தேர் தயார் செய்யும் பணி மும்முரம்
ADDED :2794 days ago
கரூர்: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேர், சுத்தம் செய்து பெயின்ட் அடிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா, கடந்த, 22ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி வீதி உலா தினந்தோறும் நடக்கிறது. திருவிழாவையொட்டி, சுவாமிக்கு இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, வரும், 30ல், கல்யாண பசுபதீஸ்வரர் உடனுறை அலங்காரவல்லி, சவுந்திரநாயகி அம்மன் எழுந்தருளும் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி, கோவில் ராஜகோபுரம் அருகே நிலைநிறுத்தியுள்ள தேரை சுத்தம் செய்து, வண்ணம் அடிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.