சேக்கிழார் அரங்கில் நாயனார் குரு பூஜை
ADDED :2794 days ago
திருப்பூர்;திருமுருகன்பூண்டி, சேக்கிழார் அரங்கில், முனையடு நாயனார் குரு பூஜை விழா நடந்தது.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, முனையடு நாயனார், தஞ்சாவூர் அருகே திருநீடூரில் பிறந்தவர். சிவ பக்தி மிகுந்தவரான அவர், அறநெறி தவறாதவர்; போர்களில் வென்று, பெறும் செல்வங்கள் அனைத்தையும் சிவனடியார்களுக்கு உணவு அளித்து, சிவ தொண்டு புரிந்து, சிவபதம் அடைந்தார். சிறப்பு வாய்ந்த முனையடு நாயனார் குரு பூஜை விழா, பூண்டியில் நடந்தது.இதில், திருப்பூர் சைவ சித்தாந்த சபையினர் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, சிவபுராணம் பாராயணம் செய்தனர். அடியார்களுக்கு அமுது படைக்கப்பட்டது.