திரிபுர சுந்தரி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா
ADDED :2794 days ago
துாக்கணாம்பாக்கம் : துாக்கணாம்பாக்கம் திரிபுர சுந்தரி கோவிலில் பிரம்மோற்சவ பெருவிழா நடந்து வருகிறது. துாக்கணாம்பாக்கம், திரிபுர சுந்தரி சமேத திருமலை கொழுந்தீஸ் வரர் கோவிலில் 9ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. இன்று (28ம் தேதி) காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு திருமண வைபோக பெருவிழா மற்றும் வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி மதியம் 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம், மாலை 6:00 மணிக்கு கொடி இறக்குதல், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.