சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :2794 days ago
அந்தியூர்: அந்தியூர் அருகே, அண்ணமார்பாளையம், சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. அந்தியூர் அருகே, அண்ணமார்பாளையம், சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 21ல், பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 22ல் கோவிலில் கம்பம் நடுதல், 23ல் பூவோடு வைத்தல் நடந்தது. நேற்று காலை கோவில் வளாகத்திற்குள், பொங்கல் வைத்தல் அதை தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அலகு குத்தியும், கையில் தீச்சட்டி ஏந்தியும், அண்ணமார் பாளையம் முக்கியமான வீதிகளின் வழியே, கோவிலை வந்தடைந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை, மஹாதீபாராதனையுடன் கோவில் பொங்கல் விழா நடந்தது. இன்று இன்று கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.