ஊஞ்சலூரில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :2794 days ago
கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 13ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன், பூச்சாட்டுதல் தொடங்கியது. 18ல் கிராம சாந்தி, பூச்சொரிதல், 19ல் கொடியேற்றம் மற்றும் சுவாமி புறப்பாடு, 20 முதல், 27 வரை தினமும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று திருத்தேர் வடம் பிடித்தலும், நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.