நாமக்கல் ஓம் காளியம்மன் திருவிழா துவக்கம்
ADDED :2794 days ago
நாமக்கல்: நாமக்கல் அருகே, செல்லப்பம்பட்டியில் அருள்மிகு ஓம் காளியம்மன் பங்குனித் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், திரளான பக்தர்கள் ஊர்வலமாக சென்று காவிரி யில் தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு பொங்கல், மாவிளக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மாலை, பூமிதி விழா நடந்தது. இன்று, எருமைக்கிடா வெட்டுதல், இரவு, 7:00 மணிக்கு ஓம்காளியம்மன் நாடக மன்றத்தாரின் சமூக நாடகம் நடக்கிறது. நாளை, நையாண்டி மேளத்துடன் அம்மன் வீதி உலா, மஞ்சள் நீர் உற்சவம், வாணவேடிக்கை மற்றும் கும்பம் விடுதல் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பக்தர்கள் மற்றும் மக்கள் செய்துள்ளனர்.