சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை பங்குனி தேர்த்திருவிழா
ADDED :2794 days ago
வெண்ணந்தூர்: பொன்பரப்பி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடக்கிறது. வெண்ணந்தூர் அடுத்த, பொன்பரப்பியில், தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவில் உள்ளது. பங்குனி மாதத்தில் திருக்கல்யாணம் மற்றும் தேர் உற்சவம் நடைபெறும். இந்தாண்டு விழா, கடந்த, 26ல் தொடங்கியது. 27ல் கொடியேற்றம், நேற்று காவடி எடுத்தல் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு கலசம் குடை வைத்தல், சாந்தி பூஜை; இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கவுள்ளது. நாளை மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 31ல், வாணவேடிக்கையுடன் சத்தாபரணம், 1ல் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கவுள்ளது.