புன்னை வனநாதர் கோவிலில் நாளை பங்குனி உத்தர விழா
ADDED :2794 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அருகே புன்னத்தில் உள்ள புன்னை வனநாதர் கோவிலில் நாளை பங்குனி உத்தரவிழா, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், புன்னை வனநாயகி உடனுறை புன்னை வனநாதர், ஆறுமுக சுப்பிரமணியசுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சுவாமிகளுக்கு நாளை சிறப்பு அபிஷேகம் செய்து, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாட்டை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.