உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திரவிழா குவிந்தனர் பக்தர்கள்

பழநி பங்குனி உத்திரவிழா குவிந்தனர் பக்தர்கள்

பழநி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் அதிகா லை முதல் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழநி முருகன்கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,2 வரை நடக்கிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏழாம் நாள் (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாலையில் கிரிவீதியில் திருத்தேரோட் டம் நடைபெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !