உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, பொள்ளாச்சி பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் நாளை (5ம் தேதி) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 4.30 மணிக்கு விஷ்வக்சேனர் பூஜை, அனுக்ஞை, வாசுதேவ புண்யவாஜன் சங்கல்பம், திருப்பாவை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 5.00 மணிக்கு பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.இதையொட்டி, சிறப்பு பூஜை, அலங்கார நைவேத்திய பூஜை நடக்கிறது. சாற்றுமறை தீர்த்த பிரசாரம் வழங்கப்படும். இன்று (4ம் தேதி) மாலை 5.00 மணிக்கு லட்சுமி நரசிம்மருக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு திருமஞ்சன அபிஷேக, அலங்கார நைவேத்திய பூஜை நடக்கிறது. வரும் ஜன., 7, 8ம் தேதிகளில், கோவிலில், திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம், லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !