மன்னீஸ்வரர் தேர்த்திருவிழா புஷ்ப பல்லக்கில் வீதியுலா!
ADDED :5063 days ago
அன்னூர் : அன்னூர், மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வில், புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதியுலா வந்தார். மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 29ம் தேதி, கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. 30ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 2ம் தேதி இரவு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் அமர்ந்த, புஷ்ப பல்லக்கு தர்மர்கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின்ரோடு வழியாக, இரவு 10.30 மணிக்கு கோவிலை அடைந்தது. இன்று காலை 9.30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவமும், மதியம் அன்னதானம் வழங்குதலும், மாலையில் சுவாமி யானை வாகனத்தில் உலா வருதலும் நடக்கிறது. 5ம் தேதி காலை 7.30 மணிக்கு மன்னீஸ்வரர் தேருக்கு எழுந்தருளுகிறார். தேரோட்டம் காலை 11.00 மணிக்கு துவங் குகிறது. மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.