திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏடு கொடுக்கும் விழா
ADDED :3102 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள் திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும்நிகழ்ச்சி நடந்தது.
காலையில் விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் யாக புறப்பாடாகி, வீதி உலா முடிந்து, கோயில் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர். நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று அம்பாளிடம் சேர்ப்பித்தனர்.இன்றிரவு (மார்ச் 31) சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலை நடக்கிறது.