சிங்கம்புணரி வேங்கைப்பட்டி ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2792 days ago
சிங்கம்புணரி:சிங்கம்புணரி வேங்கைப்பட்டி ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழாநடந்தது. இதையொட்டி மார்ச் 28 முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. நேற்று 30 ம் தேதி காலை 10:10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.