உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவிலில் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

காளையார்கோவிலில் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்

காளையார்கோவில்:உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.

பெரிய நாயகி அம்மன் அன்னம், யானை, காளை, சிம்மம், குதிரை, போன்ற வாகனங்களில் வீதியுலா நடந்தது.மார்ச் 28 இரவில் பக்தர்கள் பால்குடம் , பறவை காவடி, மயில்காவடி, கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !