தேவகோட்டை சுந்தரரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
தேவகோட்டை:தேவகோட்டை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாககணபதிஹோமம், சிறப்பு பூஜைகளை தொடர்ந்து எட்டுகால யாக பூஜையும் , பூர்ணாகுதியும் நடந்தன. காலை விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷே கம் நடந்தன. நிகழ்ச்சிகளில் குன்றக்குடிபொன்னம்பலஅடிகள், பெங்களூரு கைலாச ஆஸ்ரம சுவாமிகள், ராமநாதபுரம் மன்னர் வாரிசு குமரன் சேதுபதி, முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சும ணன், செந்தில்நாதன் எம்.பி., ராமசாமி எம்.எல்.ஏ., மதுரை கருமுத்து கண்ணன், செட்டிநாடு ராஜா குடும்பத்தை சேர்ந்த அய்யப்பன், தேவகோட்டை ஜமீன்தார்கள் காளைராஜா, சோமநாரா யணன் , முத்துவீரப்பன், பழனியப்பன், பஞ்சு நாச்சியப்பன், ரத்தினம், அருணாசலம், கண்ணன், சண்முகம், கார்த்திகேயன், சாமிநாதன், அண்ணாமலை, சுந்தரேசன், வெங்கடா சலம், அருணா சலம், பழனியப்பன், வள்ளியப்பன், ராமநாதன், அண்ணாமலை, சுப்பிரமணி யன், நடேசன், பெரிச்சியப்பன், கருணாநிதி, மீனாட்சிசுந்தரம், சிவக்குமார் சந்திரமோகன், செந்தில்நாதன் உட்பட நகரத்தார்கள், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.