உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பில் பங்குனி உத்திர விழா

வத்திராயிருப்பில் பங்குனி உத்திர விழா

வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்தன.

வத்திராயிருப்பு காசிவிஸ்நாதர் கோயிலில் சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி, தெய்வானை க்கு காலையில் 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் சஷ்டிப்பாராயண வழிபாட் டிற்கு பின் சுவாமி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மற்றொரு சன்னதி யில் உள்ள ஆறுமுகநயினாருக்கும் காலையில் சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபாடு
நடந்தது. சுவாமி ஆபரண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டு நிவேதன வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கூமாப்பட்டி பாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த விழாவில் சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபாடு நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

சஷ்டிப்பாராயணமும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. திருமுருக பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். எஸ்.ராமச்சந்திரபுரம் பழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளிய தண்டாயுதபாணிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள்  சஷ்டிப்பாராயணம் செய்து வழிபாடு செய்தனர்.பின்னர் சுவாமி ராஜஅலங்கா ரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !