சாத்தூர் கோயில் செல்லியாரம்மன்கோயில்(பூர்வீகம்) கும்பாபிஷேகம்
ADDED :2792 days ago
சாத்தூர்:சாத்தூர் மேட்டமலை செல்லியாரம்மன்கோயில்(பூர்வீகம்) கும்பாபிஷேகம் காலை 10:00 மணிக்கு நடந்தது.14 ஆண்டு பின் கோயில் புனரமைக்கப்பட்டுயாக சாலை பூஜையுடன் வேதாகம முறைப்படி கும்பாபிேஷகம் நடந்தது. சிவகாசி செந்தில்பட்டர்தலைமையில் பட்டர்கள் யாக சாலை பூஜை செய்து கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட கன்னிமூல கணபதி, செல்லியாரம் மன், காலபைரவர், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, துர்க்கை, நாகர் தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அன்னதானம் நடந்தது. சாத்தூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை தொழில் அதிபர்கள் சுப்புராஜ், பெருமாள்சாமி, கிராமமக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.