விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் நேர்த்திக்கடன் பொம்மைகள் ரெடி
விருதுநகர்:-விருதுநகர் பராசக்தி மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொம்மைகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்டங்களில் பிரசித்திப்பெற்றது. உடல்நிலை சரியாக ஆண், பெண் பொம்மை, குழந்தை உடல்நிலை சரியாக குழந்தை பொம்மை, குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு தொட்டில் குழந்தை பொம்மை, குழந்தை பிறந்தவர்களுக்கு தாய்-சேய் பொம்மை, குழந்தைகள் தவழ தவழும் பொம்மை, வீடு கட்ட நினைப்பவர்களுக்கு வீட்டுப் பொம்மை, வெளிநாட்டு வேலைக்குப் போக விமானப் பொம்மை, ஆயிரங்கண் பானை மற்றும் அக்னிச் சட்டிகள் என பலவிதமான
நேர்த்திக்கடன்களை விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்காக வேண்டிக் கொள்வார்கள். தற்போது நேர்த்திக்கடன் பொம்மை விற்பனை சூடுப்பிடித்துள்ளது.
கார் பொம்மை ரெடி மையிட்டான்பட்டியில் குலத்தொழிலாக செய்து வருகின்றோம். நேர்த்திக் கடன் பொம்மைகள் என்பதால் தை, மாசி, பங்குனி என மூன்று மாதங்கள் விரதம் இருந்து செய்வோம்.
களிமண், வண்டல்மண், மணல் மூன்றையும் கலவையாக சேர்த்து அச்சில் வைத்து பொம்மை கள் செய்வோம். பங்குனி, சித்திரையில் பொம்மை விற்பனை அதிகமாகும். ரூ.300 வரை பொம்மைகள் விற்கப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்பெஷலாக கார் வாங்க நினைப்பவர்களுக்கு கார் பொம்மை ரெடியாக இருக்கிறது. லாபம் பார்க்காமல் குறைந்த விலையில் விற்கிறோம். இவரை 99521 66059 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.நாகராஜன், பொம்மை தயாரிப்பவர்.