புனித யாத்திரைக்கு மானியம் பெறலாம்
ADDED :2787 days ago
சென்னை: சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்றவர்களுக்கு, தமிழக அரசு, மானியம் வழங்கி வருகிறது. இதன்படி, 2017 ஏப்., 1 முதல், 2018 மார்ச், 31 வரை, புனித யாத்திரை சென்றவர்கள், மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், குறைவான வருமானம் உள்ளவர்கள் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.தகுதியானோர், தீதீதீ.tணடணூஞிஞு.ணிணூஞ் என்ற, அறநிலையத்துறை இணைய தளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றுகளுடன், ’ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை - 34’என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் அனுப்பவேண்டும்.