எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
ADDED :2787 days ago
சேலம்: எல்லைப்பிடாரியம்மன் கோவிலில், சக்தி அழைப்பு மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. சேலம், எல்லைப்பிடாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபி?ஷகம் மற்றும் பூஜை நடந்தது. நேற்று, சக்தி அழைப்பு நடந்தது. குமாரசாமிப்பட்டி, சுப்ரமணியர் கோவிலிலிருந்து, சக்தி அழைத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், மாவிளக்கு ஏந்திவந்து, பலரும் பூஜையில் பங்கேற்றனர். இன்று காலை, பூங்கரகத்துடன் அலகு குத்துதல், மதியம், பொங்கல் நிகழ்ச்சி, மாலை அக்னி கரகம் மற்றும் அம்மன் ஊர்வலம், நாளை மாலை, குண்டம் திருவிழா ஆகியவை நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.