வனபத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
ADDED :2843 days ago
பல்லடம்:சிங்கனுார் ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் குண்டம் திருவிழாவில், பூவோடு எடுத்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிங்கனுார்புதுாரில் ஸ்ரீ கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 14ம் ஆண்டு குண்டம் திருவிழா, நடந்தது. முன்னதாக, கடந்த, 1ல், பூ கேட்டல்; 23ல், பூச்சாட்டுதல், ஆயக்கால் போடுதல் நிழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 28ல் கொடியேற்றம், அதை தொடர்ந்து வசந்த விழா சீர்வரிசை கொண்டு வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், திருக்கல்யாணம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து, குண்டம் திறப்பு பூப்போடுதல், அம்மை அழைத்தல், குண்டம் இறங்குதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில், வனபத்ர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.