உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதரை மந்தையம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

நல்லதரை மந்தையம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா

நரிக்குடி: நல்லதரை ஸ்ரீமந்தையம்மன் கோயிலில் பங்குனி பொங்கல்விழா மற்றும் முளைப்பாரி திருவிழா நடந்தது. இக்கோயில்  விழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.  மதியம் அக்னிச் சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது.  மறு நாள் காலை குதிரை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் முளைப்பாரி எடுக்கப்பட்டு பெண்கள் ஊர்வலமாக வந்து கண்மாயில் கரைத்தனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !