உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அணியரங்க பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்சர நாம அர்ச்சனை

அணியரங்க பெருமாள் கோவிலில் விஷ்ணு சகஸ்சர நாம அர்ச்சனை

சென்னிமலை: வடுகப்பாளையம், அணியரங்க பெருமாள் கோவிலில், நேற்று விஷ்ணு சகஸ்சர நாம லட்சார்ச்சனை விழா நடந்தது. சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமம், வடுகபாளையத்தில், சிறுமலை பகுதியில் அமைந்துள்ளது அணியரங்க பெருமாள் கோவில். பழமையான கோவிலில், நேற்று விஷ்ணு சகஸ்சரநாம லட்சார்ச்சனை பெருவிழா, 12 வேத விற்பன்ன ஆச்சாரியார்கள் கொண்டு நடத்தப்பட்டது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவர் அணியரங்க பெருமாள் மற்றும் தாயார்களுக்கு அபி?ஷகம் மற்றும் ஆஞ்சயேருக்கும் அபி ?ஷகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கலசஸ்தாபனம் நடந்து, சகஸ்சரநாம அர்ச்சனை தொடங்கியது. 10:30 மணிக்கு நிறைவு பெற்று கலச புறப்பாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !