தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மின்னொளி தேரோட்டம்
ADDED :2859 days ago
சிவகங்கை: இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று இரவு மின்னொளி தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் விழா மார்ச் 29 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவு 10:00 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் விழா நடந்தது. நேற்று இரவு மின்னொளி அலங்கார தேரோட்டம் நடக்கிறது. இன்று (ஏப்., 7) காலை 7:45 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 6:15 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:25 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. நாளை (ஏப்., 8) இரவு 7:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.