முடுவார்பட்டியில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :2748 days ago
அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டியில் காமாட்சி அம்மன், காஞ்சரடி கழுவடிசாமிகள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான 48வது நாள் மண்டல அபிஷேகத்தையொட்டி புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. மேலும் விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.