உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை முதல் ஞாயிறு: ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு

சித்திரை முதல் ஞாயிறு: ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சித்திரை முதல் ஞாயிறை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம் அக்ரஹாரம், லட்சுமிநாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சித்திரை மாத முதல் ஞாயிறு முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள், பக்தி பாடல்கள் பாடினர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !