உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோபுரத்தில் செடிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், ராஜகோபுரத்தில், வளரும் செடிகளால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சிதையும் நிலை உள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்தது ஏகாம்பரநாதர் கோவில். 23 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில், சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து, ஏகாம்பரநாதரை வழிபட்டு உள்ளனர். இதன் ராஜகோபுரம், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரால், கி.பி., 1509ல் கட்டப்பட்டது. கடந்த மாதம், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், விமரிசையாக நடந்து முடிந்தது. இந்நிலையில், ராஜகோபுரத்தில் செடி, கொடிகள் வளர துவங்கியுள்ளன. இவற்றின், வேர் பகுதியால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சேதமாகும் நிலை உள்ளது. எனவே, செடிகள் சிறிய அளவில் இருக்கும்போதே, அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !