சாணம் தூவினால் கல்யாணம்
ADDED :2778 days ago
சித்திரையில் வரும் அட்சயதிரிதியை, புரட்டாசியில் வரும் விஜயதசமி ஆகிய இருநாட்களிலும் பாவகிரகங்களின் ஆதிக்கமே கிடையாது. இந்த நாட்கள் சுபம் நடத்துவதற்கேற்ற முகூர்த்தநாட்கள். எந்த சுபவிஷயத்தையும் இந்நாளில் தொடங்கலாம். கன்னிப்பெண்கள் இந்தநாளில் நல்லகணவர் அமைய வேண்டி எருவை(காய்ந்த மாட்டுச்சாணம்) சந்திரனை நோக்கி தூவி மூன்றாம்பிறையை தரிசிக்க வேண்டும். வழிபாட்டை முடித்ததும், சிவன்கோயிலில் இருக்கும் அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வணங்க வேண்டும்.