உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 சேலை கோபுரத்தில் பொம்மி அம்பாள் தரிசனம்

108 சேலை கோபுரத்தில் பொம்மி அம்பாள் தரிசனம்

திருவள்ளூர்: அக் ஷய திருதியை முன்னிட்டு, முத்தீஸ்வரர் கோவிலில், அம்பாளுக்கு, 108 சேலைகளால் பிரமாண்ட கோபுர அலங்காரம் நடந்தது. திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகில், முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அக் ஷய திருதியை முன்னிட்டு, பொம்மி அம்பாளுக்கு, 108 சேலைகளால் ஆன, பிரமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டது. அதன் உச்சியில், அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !