செல்லியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம் திரளானோர் பங்கேற்பு
ADDED :2763 days ago
வீரபாண்டி: தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம், நாளை நடக்கவுள்ளது. அதையொட்டி, நேற்று காலை, பெரிய மாரியம்மன் கோவிலிலிருந்து, 500க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி தட்டுகளை சுமந்து, முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தனர். மாலை, வாஸ்து பூஜை, இரவு நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று விநாயகர், கோ, சிவசூரிய பூஜையுடன், இரவில் புதிய விக்கிரங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படவுள்ளது. நாளை காலை, சிவாச்சாரியார்கள், கும்பாபிேஷகம் நடத்தி வைக்கவுள்ளனர்.