உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை பாலமுருகர் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

கோட்டை பாலமுருகர் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

கும்மிடிப்பூண்டி: சித்திரை கிருத்திகையை முன்னிட்டு, கோட்டக்கரை, பாலமுருகர் கோவிலில், பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரையில் உள்ள பாலமுருகர் கோவிலில், கடந்த, 9ம் தேதி துவங்கி, நேற்று வரை, சித்திரை கிருத்திகை திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பாலமுருகர், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, ஏகவல்லியம்மன் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள், பால்குடம், காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதன்பின், பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள், கோட்டக்கரை பாலமுருகரை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !