உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குன்றம் பாலமுருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

செங்குன்றம் பாலமுருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா

செங்குன்றம்: சித்திரை கிருத்திகை திருவிழாவில், பாலமுருகன் கோவிலுக்கு பறவை காவடி மூலம், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். செங்குன்றம், நாரவாரிக்குப்பத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில், 37ம் ஆண்டு சித்திரை கிருத்திகை திருவிழா, நேற்று நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி, அலகு குத்தி, பறவை காவடி, இளநீர் காவடி சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு, ஊர்வலம் சென்ற வழிகளில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அன்னதானம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !