திருச்செந்தூர் கோயிலில் பூமிபூஜை!
ADDED :5057 days ago
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில், ரூ. 30 லட்சம் செலவில், புதிதாக ஆனந்த விலாச மண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து பூஜை நடந்தன. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கட்டடப்பணி ஒருமாதத்தில் முடியுமென அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மண்டபத்தில் மாசி, ஆவணித்திருவிழாவில் சுவாமி எழுந்தருள்வார். இம்மண்டப பழைய கட்டடம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்ததால், இப்புதிய கட்டடம் கட்டப்படுகிறது.