பைரவர் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
ADDED :2766 days ago
சாலவாக்கம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பழுதடைந்த கோவில்களை சீரமைத்து, வழிப்பாட்டிற்கு கொண்டு வர, அறநிலையத் துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கோவில்களை ஆய்வு செய்து, புனரமைப்பு பணிக்காக, மதிப்பீடு தயார் செய்து, அரசின் நிதிக்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில், சாலவாக்கம் மலை மீது, பழுதடைந்த நிலையில் உள்ள பைரவர் கோவிலை சீர் செய்வது குறித்து, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் வேலுார் மண்டல ஸ்தபதி மார்கபந்து உள்ளிட்டோர், நேற்று ஆய்வு செய்தனர்.