உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரசுவாமி வீதியுலா

குமாரசுவாமி வீதியுலா

புல்லரம்பாக்கம் : புல்லரம்பாக்கத்தில், கிருத்திகையை முன்னிட்டு, குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், வள்ளி, தெய்வானை சமேத குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.அன்றிரவு, வள்ளி, தெய்வானை சமேதராக குமாரசுவாமி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !