பூங்குழலி அம்மன் கோவிலில் சங்கர ஜெயந்தி விழா
ADDED :2767 days ago
கொடுமுடி: பூங்குழலி அம்மன் கோவிலில், சங்கர ஜெயந்தி விழா நடந்தது. கொடுமுடி, நஞ்சை கொளாநல்லி பூங்குழலி அம்மன் கோவிலில், 60வது ஆண்டு ஸ்ரீசங்கர ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி மஹா சங்கல்பம், சகஸ்ர நாமம், வேத பாராயணம், மங்கள ஹார்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் அனந்த ஸ்ரீ விபூஷித ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சன்னிதானத்தில், மதியம் வரை நடந்தது. இதை தொடர்ந்து கரூர் ஆன்மிக பேருரையாளர் ஸ்ரீசுவாமி தாசனின் "துங்கா தீர குரு பரம்பரை” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, அன்ன சந்தர்ப்பணம், மாலை வரை விஷ்ணு சகஸ்ர நாம அகண்ட நாம பாராயணம் நடந்தன.