உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கோவை : சின்னவேடம்பட்டியில், அமைந்துள்ள மகாலட்சுமி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் நான்காவது குருமகா சன்னிதானம், குமரகுருபர சுவாமிகள் தலைமையில், நாளை அதிகாலை 4:00 மணிக்கு கும்பாபிஷேக விழா துவங்குகிறது. காலை 6:00 மணிக்கு, மலைவாழ் மக்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 6:30 மணிக்குமகாலட்சுமி அம்மன் கோபுர கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு கருவறையில் லட்சுமி அம்மனுக்கு தீபாராதனை, அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் நடக்கின்றன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மண்டல பூஜைகள், ஏப்., 28 முதல்மே 21ம் தேதி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !