முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் பால்குட விழா
ADDED :2763 days ago
சென்னை: மயிலாப்பூர், முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 1,008 பால்குட விழா, 29ம் தேதி நடக்கிறது. மயிலாப்பூரில் அமைந்துள்ள, முண்டகக்கண்ணி அம்மன் கோவில். 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவர் அம்மன் சுயம்பாக தோன்றினார். சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, உலக நம்மைக்காகவும், கோடை வெப்பம் தணியவும், அம்மை நோய் தாக்காமல் காக்கவும், ஆண்டுதோறும் அம்மனுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, பால் குட விழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. அன்று காலை, பக்தர்கள், 1,008 பால் குடங்களுடன், வீதிகளை வலம் வருவர். காலை, 11:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு, மகாலட்சுமி அலங்காரத்தில், உற்சவர் அம்மனின் திருவீதி உலா நடக்கிறது.