மயூர தாண்டவ நடராஜர்!
ADDED :2766 days ago
பொதுவாக சிவன்கோயில்களில் நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார்தான் இருப்பார்கள். ஆனால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் நடராஜருடன் ஜுரஹர தேவரும் இருக்கிறார். இத்தலத்தில் ஈசன் மயில் வடிவம் எடுத்து நடனம் ஆடியதால் மயூர தாண்டவ நடராஜர் என்கிறார்கள். மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் இருக்கும் ஜுரஹரதேவரை தரிசித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை!