சின்னமனுார் சிவகாமியம்மன் திருக்கல்யாணம்
சின்னமனுார்: சின்னமனுார் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்-சிவகாமியம்மன் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. பிரசித்தி பெற்ற சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உபயதாரர்கள் சார்பில் மண்டகப்படி நடக்கிறது. முக்கிய நிகழ்வான லாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் திருக்கல்யாணம் இன்று காலை 10:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. காலை 8.00 மணி முதல் தெய்வீக பேரவை சார்பில் தேவாரம், திருவாசகம் ஓதுதல் நடைபெறும். உபயதாரர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 மங்கள பைகள் திருக்கல்யாண மொய் ரசீது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அடைப்படையில் வழங்கப்படவுள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 11:00 மணியில் இருந்து 12.00 மணிக்குள் சுவாமி-அம்மன் தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, கண்ணாடி கடை முக்கில் தேர் நிறுத்தப்படும். ஏப். 29ல் தேரடியில் தேர் நிலை நிறுத்தப்படும்.