பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதல் விழா
ADDED :2762 days ago
ஓமலூர்: பெரிய மாரியம்மன் கோவிலில், கம்பம் நடும் விழா நடந்தது. ஓமலூர், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களில், சித்திரை திருவிழாவுக்கு, கடந்த, 24ல், பூச்சாட்டுதல் விழா நடந்தது. நேற்றிரவு, 9:00 மணிக்கு, பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில், கம்பம் நடும் விழா நடந்தது. முன்னதாக, கம்பத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து, அம்மனை சுற்றி வலம்வரச் செய்தனர். இதையொட்டி, மூலவர் மாரியம்மன், சின்ன மாரியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை, திரவுபதி அம்மனுக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.