சித்திரை தேர்த்திருவிழா: மாவிளக்கு ஊர்வலம்
ADDED :2762 days ago
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில், சிறப்பு அபி?ஷகம், மண்டகப்படி நடந்து வருகிறது. நேற்று, தண்ணீர்பந்தல்காடு பகுதியினர் தீர்த்தக்குடம், அக்னிசட்டி, மாவிளக்குகளுடன் ஊர்வலம் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.