பழநி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2762 days ago
பழநி: பழநி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்தது. பழநி மேற்குரதவீதி லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் துவங்கி 10நாள் நடக்கிறது. நேற்று லட்சுமி நாராயணப்பெருமாளுக்கு அபிஷேகம், பூஜையுடன், இரவில் திருக்கல்யாணம் நடந்தது. சேஷவாகனத்தில் பெருமாள் வீதிஉலா வந்தார். வெள்ளித் தேரோட்டம் : நாளை(ஏப்.,29) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமும், காலையில் திருஆவினன்குடி கோயிலில் அபிேஷகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணைஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.