ரெணகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
ADDED :2761 days ago
பழநி, பழநி புதுதாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயிலில், சித்திரை திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பொன் ஆபரணப்பெட்டி எடுத்து, கோயில் கிணற்றுநீரில் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. தங்க கவசம் சாத்தியும், வெள்ளித்தேரில் அம்மன் ஊர்வலம் நடந்தது. சண்முகாநதியில் தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலத்துடன் சக்தி கரகம் கங்ககை சென்றடைதல் நடந்தது. இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ரெணகருப்பணசாமி, ரெணமுனி வழிபாட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.