உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீராபுரம் கோவிலில் பால் குட விழா கோலாகலம்

வீராபுரம் கோவிலில் பால் குட விழா கோலாகலம்

வீராபுரம்: வீராபுரம் செங்கழனியம்மன் கோவிலில், பால் குட விழா நேற்று கோலாகலமாக நடந்தது.திருக்கழுக்குன்றம் ஒன்றியம் , வீராபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த செங்கழனியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, நேற்று பால்குட விழா நடந்தது. இதை ஒட்டி, 27ம் தேதி முதல், பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு, அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, சோலை வாழியம்மன் கோவிலிலிருந்து, மங்கள வாத்தியத்துடன், பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, செங்கழினியம்மன் கோவிலை அடைந்தனர். பின், அம்மனுக்கு பால்குட அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதில் அக்கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், சித்ரா பவுர்ணமியை ஒட்டி, திருக்கழுக்குன்றம், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள சொக்கம்மன் புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !