உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னீர்மடை தர்மராசர் கோவில் குண்டம் திருவிழா

பன்னீர்மடை தர்மராசர் கோவில் குண்டம் திருவிழா

பெ .நா.பாளை யம்: துடியலுார் பன்னீர்மடை தர்மராசர் கோவிலில் குண்டம் திருவிழா கட ந்த 17ல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.தீவட்டி சலாம், அம்மன் அழை த்தல், சக்தி கரகம் அழைத்தல், திருக்கல்யாணம், பாண்டவர்களுக்கு பட்டு சாத்துதல், அரவான் சிரசு, திருவிளக்கு பூஜை ஆகியன நடந்தது. நேற்று காலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. மதியம் அலங்கார பூஜையும், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தன. இன்று இரவு பரிவேட்டையும், நாளை காலை வசந்த விழாவும் நடக்கிறது. வரும், 6ல் இரவு மறுபூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !