ஊத்துக்கோட்டையில் சங்கடஹர சதுர்த்தி விழா
ஊத்துக்கோட்டை:கால பைரவர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி நடந்த சிறப்பு அபிஷேக, ஆராதனையில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை மற்றும் தேய்பிளை அஷ்டமி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
நேற்று, சங்கடஹர சதுர்த்தி நாளையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள கணபதிக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பின், சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், ஊத்துக்கோட்டை, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில்.
பஜார் பகுதியில் உள்ள நாகவல்லியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கணபதி, சுருட்டப் பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில்.
சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.