உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதை அடக்க என்ன வழி?

மனதை அடக்க என்ன வழி?

மனதைக் கட்டுப்படுத்த இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வெளிப்படையானது. மற்றொன்று அந்தரங்கமானது. தர்மம், வழிபாடு - இறை ஆராதனைகள், யாகம் முதலானவை வெளிப்படையான சாதனங்கள், அந்தரங்க சாதனங்கள் ஐந்து, அவை: அகிம்சை, சத்தியம், திருடாமை, தூய்மை, புலனடக்கம். மனதை அன்பால் நிறைப்பதும் உயிர்களிடத்தில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதும் அகிம்சை. மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் உண்மையின் வழியில் ஈடுபடுத்துவது சத்தியம். திருடாமை என்ன என்பது நாமறிந்தே. மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், அதைக் கவர்வதும் கூடாது. உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது அடுத்த சாதனம். இவற்றுடன் புலனடக்கமும் மனதைக் கட்டுப்படுத்த வழிசெய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !